×

ஈரான் உச்சதலைவர் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க கார்கேவுக்கு அழைப்பு

புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கடந்த பிப்.28 அன்ற பலியானார். அவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 5 முதல் 9 வரை நடைபெற உள்ளது. இறுதிக்கட்டச் சடங்கு ஜூலை 9 அன்று மஷாத் நகரில் நடைபெறும். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், பிரதமர் மோடியை இந்தச் சடங்குகளில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.

வெளியுறவுத் துறை இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து ஈரானுக்குச் செல்லவுள்ள காங்கிரஸ் குழுவை இறுதி செய்யும் பணியில் காங்கிரஸ் தலைவர் கார்கே ஈடுபட்டுள்ளார்.

Tags : Kharge ,Iran ,Supreme Leader ,New Delhi ,Ayatollah Ali Khamenei ,US ,Israel ,
× RELATED குதிரை பேர புகார் அமித்ஷாவுடன் ஆளுநர்...