விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சாலையில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: ஆவடி மாநகராட்சி நடவடிக்கை

ஆவடி: முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் முழுவதும் ஆவடி மாநகராட்சி பகுதியான ஆவடி எம்எல்ஏ அலுவலகம், பட்டாபிராம், திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள சாலையோரங்களில், விதிமீறி விளம்பர பதாகை, விளம்பர தட்டிகள், பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சரண்யா உத்தரவின்படி, நேற்று காலை முதல் மாலை வரை, திருமுல்லைவாயில், சி.டி.எச்.சாலையில் விதிமீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. இதில், மின் கம்பங்களில் வைக்கப்பட்ட 30 விளம்பர தட்டிகள், 15 பெரிய மற்றும் சிறிய பேனர்களை ஆவடி போக்குவரத்து போலீசார் உதவியுடன் நேற்று அப்புறப்படுத்தினர்.

மேலும் ஆளுங்கட்சி என்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான அனைத்து இடங்களிலும், பொது இடங்களிலும் சாலை சென்டர் மீடியனில் பேனர்கள் போஸ்டர்கள் அத்துமீறி விஜய் கட்சியினர் ஒட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: