வாழைத்தார் மற்றும் தேங்காய் திருட்டுக்களை தடுக்க போலீசாருடன் இணைந்து ரோந்து செல்ல விவசாயிகள் முடிவு

சென்னிமலை : சென்னிமலை அருகே அய்யம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை தோட்டங்களுக்குள் சில மர்ம நபர்கள் புகுந்து அடிக்கடி வாழைத்தார்களை வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர்.

அதேபோல் மட்டை உரிப்பதற்காக தேங்காய் போட்டு வைத்திருந்தால் அதனையும் எடுத்து சென்று விடுகின்றனர். அதனால் இந்த திருட்டுக்களை தடுக்க இரவு நேரங்களில் போலீசாருடன் இணைந்து விவசாயிகளும் ரோந்து பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், ‘‘பல இடங்களில் சாலையோரம் வாழைத்தோப்பு மற்றும் தென்னை மரங்கள் உள்ளது. இந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் நபர்கள் வாழை மரத்தை குறுக்காக வெட்டி வாழைத்தார்களை வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர்.

அதேபோல் தேங்காய்களையும் எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசாருடன் இணைந்து விவசாயிகள் ஆகிய நாங்களும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளோம்’’ என்றார்.

Related Stories: