சென்னை: 24.06.2026 அன்று மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியினை, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை லார்சன் & டூப்ரோ குழும கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி, மயிலாப்பூர் ஆகியவை இணைந்து நடத்தின. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளான காது, மூக்கு, தொண்டை, நீரிழிவு நோய், இரத்த அழுத்த , தோல் பரிசோதனை உள்ளிட்ட இதர பொது மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகளையும் அமைச்சர் வழங்கினார்.
பின்னர் மாணவ மாணவியரிடையே கல்வியின் அவசியம், நல்லொழுக்கத்தின் முக்கியத்துவம், தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளுதல், உடல்நலத்தினை பேணிக்காத்தல் ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார். மேலும், தனது தொகுதி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்றும் உற்றத்துணையாக இருப்பேன் என்றும், மக்கள் சேவையே தனது முதன்மை நோக்கம் என்றும் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சி, மருத்துவம், கல்வி மற்றும் சமூக நலன் ஆகியவற்றை ஒரே தளத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்த சிறப்பான சமூக நல முயற்சியாக வெற்றிகரமாக நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் லார்சன் & டூப்ரோ குழும கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க அலுவலர்கள், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபபெற்றனர்.
