சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை செங்கல்பட்டிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியரின் 13 வயது மகளை அண்டை வீட்டு சிறுவன் உள்ளிட்டோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 சிறார் உட்பட 15 பேர் மீது காவல்துறை 2023ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. ஆறு சிறார் மீதான வழக்கு செங்கல்பட்டில் உள்ள சிறார் நீதிமன்றத்திலும், மற்ற ஒன்பது பேர் மீதான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட போக்சோ வழக்குக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில், செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையை சென்னை மாற்ற வேண்டும் என்று சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், தனது மகள் சென்னையில் படித்து வரும் நிலையில் வழக்கை சென்னைக்கு மாற்றம் செய்தால் சிறுமியின் படிப்புக்கு இடையூறு ஏற்படாது.

சிரமம் இல்லாமல் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்க அவளுக்கு வசதியாக இருக்கும். செங்கல்பட்டில் பாதிக்கப்பட்ட சிறார் சாட்சியம் அளிப்பதற்கான சாதகமான சூழல் குறைவாக உள்ளது என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை முன்வைத்த கோரிக்கையை ஏற்று ஆறு சிறார்களுக்கு எதிராக செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், மற்ற ஒன்பது பேருக்கு எதிராக செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் சென்னைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: