சென்னை: பள்ளிக் கல்வித்துறை அறிக்கை: மேல்நிலை இரண்டாமாண்டு, முதலாமாண்டு விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் பணி தொடர்பாக இரண்டு முகாம்கள் அமைக்கப்பட்டு அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர் குழுவினரைக் கொண்டு விடைத்தாள்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் செய்யப்பட்டது. தற்போது மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் வெளியிடப்படும்.
இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாளில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவ செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேல்நிலை பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மேலும் சந்தேகங்களுக்கு 9498383075, 9498383076 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
