மரபுகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு பொதுக்கூட்ட பேச்சு போல இருந்தது: வீரபாண்டியன் விமர்சனம்

திருச்சுழி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் வீரபாண்டியன், திருச்சுழியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வெள்ளை அறிக்கை பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? எங்களுக்கு கீழ் ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லை. நாட்டின் பிரதமரே கடன் பெற்று இருக்கிறார். இந்தியாவே கடனில் உள்ளது. இந்த கடனை சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியது பொதுக்கூட்டத்தில் பேசியது போல் உள்ளது.

முன்னோர்கள் நல்ல பண்புகளை, மரபுகளை சட்டசபையில் விட்டு சென்றுள்ளார்கள். பல ஆளுமைகள் வீற்றிருந்த இடம் சட்டசபை. அதை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் யாரும் தாழ்வுபடுத்த கூடாது. அது முதல்வராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சரி.

யாரையும் உடல் மொழியால் கருத்து சொல்லக்கூடாது. எவ்வளவுதான் எதிரெதிர் கருத்துக்கள் இருந்தாலும், பண்பு தவறிய வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. யார் தவறு செய்தாலும் அது தவறுதான். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அதில் கூடுதலாக இருக்க வேண்டும். முதல்வர் தந்தையை தேடுகிறேன் என கூறியது ஏற்புடையது அல்ல. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: