சென்னை: தலைமைச் செயலகத்தில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோர் தலைமையில் நேரடி நெல் கொள்முதல், நெல் இயக்கம் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொது விநியோகக் கடைகளில் காலிக் கோணிகள் குறித்து உரிய பதிவேடுகளை பராமரிக்கவும், தேங்கிக் கிடக்கும் காலி கோணிப் பைகளை உடனுக்குடன் சம்மந்தப்பட்ட கிடங்கிற்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அலுவலரிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான நிலுவைத் தொகை ரூ.129.82 கோடியினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டது. பசிபிக் பெருங்கடலில் உருவாகும் எல்-நினோ காலநிலை நிகழ்வு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
