×

டூவீலர், செல்போனை எஸ்ஐ பறித்ததால் வாலிபர் தற்கொலை

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி கோடிக்காடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (32). இவர் ரவி என்பவரது விசைத்தறியில் வேலை செய்து வந்தார். ரவியின் மகளை திடீரென காணவில்லை. அவர் கொண்டலாம்பட்டி போலீசில் தினேசை விசாரித்தால் தகவல் தெரியவரும் என புகார் செய்தார். எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தியபோது ரவியின் மகள், காதலித்த வாலிபரை திருமணம் செய்து கொண்டு போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம் அடைந்தார். திருமண வயதை தாண்டியதால் இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தினேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தினேசின் பெற்றோர் அளித்த புகாரில், ரவியின் மகள் காதல் திருமணம் செய்வதற்கு தினேஷ் காரணமாக இருந்ததாக கருதி அவரை ரவியின் மைத்துனர் மணிகண்டன் (34) டார்ச்சர் செய்துள்ளார். எஸ்.ஐ.ஆனந்த், தினேசின் டூவீலரையும், செல்போனையும் பறித்து மணிகண்டன் தரப்பினரிடம் கொடுத்ததால் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தனர்.

எஸ்.ஐ. ஆனந்த் 3 நாட்களுக்கு முன்பு தான் புகார்களின் அடிப்படையில் காரிப்பட்டிக்கு மாற்றப்பட்டார். அவர் தினேசின் டூவீலர், செல்போனை பறித்தாரா என விசாரணை நடக்கிறது. இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : SI ,Salem ,Dinesh ,Kodikkadi ,Kondalambatti, Salem ,Ravi ,Kondalambatti ,
× RELATED டூவீலர், செல்போனை எஸ்ஐ பறித்ததால் வாலிபர் தற்கொலை