×

தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென்றதா..? தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நழுவல்

சிவகாசி: தமிழகத்துக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென்றதாக கூறுவது தொடர்பாக, சட்டசபையில் யாராவது கேள்வி கேட்டால் உரிய விளக்கம் அளிக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சிவகாசியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்துக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென்றதாக சிலர் கூறி வருகிறார்கள். அவர்களுக்கு உரிய பதில் தரப்படும். சட்டசபையில் இது குறித்து யாராவது கேள்வி கேட்டால் உரிய விளக்கம் அளிக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்து 30 நாட்கள் தான் ஆகிறது. ஒரு மாநிலத்தில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்றால் பலகட்ட பணிகள் உள்ளது. அரசு அதிகாரிகள் சிலரை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்’’ என்றார்.

Tags : Andhra Pradesh ,Industries Minister Keerthana ,Sivakasi ,Minister ,Keerthana ,Tamil Nadu ,Industries ,Minister Keerthana ,Tamil Nadu… ,
× RELATED தமிழகத்தில் உள்ள 46 கோயில்களின் உபரி...