சென்னை: ஜனாதிபதியாக உயர்ந்த தங்களது வாழ்க்கை பயணம், இந்தியா முழுவதும் பல லட்சம் பேருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும் என திரவுபதி முர்முக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். எளிய பின்னணியில் இருந்து இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த தங்களது வாழ்க்கை பயணம் இந்தியா முழுவதும் பல லட்சம் பேருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். பணிவும், விடாமுயற்சியும், அமைதியான வலிமையும் கொண்டதாக தங்களது பொது வாழ்க்கை அமைந்துள்ளது. தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
