×

சட்டீஸ்கரில் உள்ள மத்திய பல்கலை. சான்றிதழில் ‘இந்தியா’ ‘பாரத்’ ஆக மாற்றம்

சட்டீஸ்கரில் உள்ள மத்திய பல்கலை. சான்றிதழில் ‘இந்தியா’ ‘பாரத்’ ஆக மாற்றம்பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் குரு காசிதாஸ் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய மதிப்பெண் பட்டியல்கள், பட்டச் சான்றிதழ்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானத்தை பல்கலைக்கழக நிலைக்குழு சுமார் 6 மாதத்திற்கு முன்பே நிறைவேற்றி விட்டதாக பல்கலையின் துணைவேந்தர் அலோக்குமார் கூறினார்.

Tags : Central University ,Chhattisgarh ,India ,Guru ,Kasidas Central University ,Bilaspur, Chhattisgarh ,
× RELATED மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து:...