நீட் மறுதேர்வு நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் தொலைபேசி வழியாக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

சென்னை: நீட் மறுதேர்வு நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104ஐ அழைக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “2026-27 கல்வியாண்டின் நீட் மறுதேர்வு 21.06.2026 அன்று நடைபெற உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, ‘டெலி கவுன்சிலிங்’ (Tele Counselling) பெறுவதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: