சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு கடத்திவரப்பட்ட 11 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருள் பாக்கெட்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உயர் ரக கஞ்சா கடத்தி |வந்த கேரளத்தைச் சேர்ந்த, 2 பேரை கைது செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
