பாலியல் வன்முறைகள் குறித்து முதல்வர் வாய் திறக்காவிட்டால் புரட்சி வெடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

 

புழல்: செங்குன்றம் அருகே நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் தலைமை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் ஜோசப் விஜய்யை நம்பி மக்கள் நம்பி வாக்களித்தனர். ஆனால், அவர் மக்களின் பிரச்னைகளுக்கு வாய் திறக்காமல் மவுனமாகவே இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திலேயே அவரது சாயம் வெளுத்துவிட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சமீபகாலமாக பாலியல் வன்முறையும் பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு திமுக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தவெக ஆட்சி குறித்து 6 மாதங்களுக்கு கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால், சமீபகாலமாக நடப்பவற்றை கண்டு தாங்க முடியாத வேதனை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் தவெக அரசின் 6 மாத சாதனைகளுக்குத்தான் கால அவகாசம் கொடுத்தோம். ஆனால், தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை, குற்றங்கள் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் வாய் திறக்காமல் மவுனமாகவே இருந்து வருகிறார். அவரது அலட்சிய நடவடிக்கைகளை கண்டித்து, தமிழ்நாட்டில் மிகப்பெரிய புரட்சி விரைவில் வெடிக்கும்.

Related Stories: