சென்னை: செப்டம்பர் 17 முதல் 25ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் 26ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை காலாண்டு விடுமுறை எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் டிசம்பர் 16 முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் 24 முதல் 2027 ஜனவரி 3ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் 2027 ஏப்ரல் 23ம் தேதி எனவும் 2027 ஏப்ரல் 24ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
