அகிலேஷ் யாதவின் மகள் பற்றி அவதூறு: உ.பி. முதல்வர் ஆதித்ய நாத் கண்டனம்

அசம்கர்: உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவின் மகள் அதிதி யாதவ் மற்றும் அவரது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் விதமாக அவதூறு கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இது பற்றி அசம்கரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசுகையில்,“ மகள் என்றால் மகள்தான்.

கிராமத்தில் உள்ள ஒரு மகள், சகோதரி அனைவருக்கும் மகள், சகோதரிதான் என்ற விழுமியங்களுடனே நாம் வளர்ந்துள்ளோம். இதில் எந்த வேறுபாடும் இல்லை. எனவே, எந்த மகள்களும், சகோதரிகளும் குறி வைக்கப்பட கூடாது. பொதுவௌியில் கருத்துகளை பகிரும்போது கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

Related Stories: