சென்னை: ஆவின் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான ‘கிரீன் மேஜிக்’ பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாக குறைக்கப்பட்டதாகவோ வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாக குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆவின் கிரீன் மேஜிக் பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
