சென்னை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்குப் பதிலாக ப.சிதம்பரம் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சித்தராமையாவும் தலைவர் பதவிக்கான ரேசில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரசிலும் அதிரடி மாற்றத்தை கொண்டு வர கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழ காங். தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு மாற்றாக, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை தலைவராகக் கொண்டு வர பரிசீலித்து வருவதாக தெரிகிறது. எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், முன்னாள் எம்பி டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்டோரும் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
