லக்னோ: அரசு பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதைக் கண்டித்தும், தேர்வில் அதிக வெளிப்படைத்தன்மை கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தலைமையில் உபியில் போராட்டம் நடந்தது. அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை கண்டித்தும் இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் உபி தலைநகர் லக்னோவில் நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தலைமையில் போராட்டம் நடந்தது.
இதில், ஆசிரியர், மருத்துவம், அரசு நிர்வாக பணி மற்றும் இதர பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரும்20ம் தேதி டெல்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடக்க உள்ளது. அதற்கு முன்பு, சிஜேபி சார்பில் அமிர்தசரஸ் மற்றும் பெங்களூருவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
