புதுடெல்லி: ஓமன் துறைமுகத்துக்கு அருகே பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற எம்டி செட்டபெல்லோ என்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய மாலுமிகள் பலியாகினர். தொடர்ந்து இந்திய மாலுமிகள் சென்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் ஜேசன் மீக்சை நேற்று இரண்டாவது முறையாக நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டது. இது போன்ற நடவடிக்கைகள் ஏற்று கொள்ள முடியாதது.இது சர்வதேச கடல்சார் வர்த்தகத்தின் பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்தியாவின் ஆழ்ந்த கவலைகளைத் தனது அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அமெரிக்கத் தூதரக அதிகாரி கேட்டுக்கொள்ளப்பட்டார்.
