சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே மாதத்துக்கான ஊதியத்தை முறையாக வழங்கவில்லை எனக் கூறி மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தால் மாநகராட்சி, நகர்ப்புற சுகாதார நிலையங்களில் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
