தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கள் இறக்கியதாக விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் கள் விற்பனை தொடர்பாக ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. “டாஸ்மாக்கில் ஈட்டும் வருமானத்தை கள் விற்பனை மூலம் ஈட்டலாமே. அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளத்தில் கள் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு செயல் திட்டத்தை வகுத்து கள் விற்பனைக்கு அனுமதிக்கலாம்; வருமானமும் கிடைக்கும்’ ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: