ஆவடி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஆவடி மாநகராட்சி சார்பில் 200 பனை மரக்கன்றுகள் நடப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும், பனை மரங்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தன் தங்கல் ஏரியில் பனை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தலைமை தாங்கினார். ஆவடி எம்எல்ஏ ரமேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இதில், ஏரிக்கரை பகுதியில் 200 பனை மரக்கன்றுகளை நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் மாரிசெல்வி, மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் மாமன்ற உறுப்பினர்கள், தவெக வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
