அரிட்டாபட்டியில் கலெக்டர் ஆய்வு

மேலூர், ஜூன் 6: மேலூர் அருகே அரிட்டாபட்டியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அரிட்டாபட்டியில் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 2200 ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், கி.பி. 7ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 1300 ஆண்டுகள் பழமையான குடைவரை சிவன் கோயிலை பார்வையிட்டு, அவற்றின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

 

Related Stories: