நியூசி.யுடன் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து முன்னிலை

லண்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் லண்டனில் துவங்கிய முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து வேக பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கி தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 56 ரன்கள் அடித்தார். நியூசி. தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியும் இங்கிலாந்தின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் 61 ரன்கள் எடுத்தது. நேற்று 2வது நாள் ஆட்டத்தை துவக்கிய சிறிது நேரத்திலே நியூசிலாந்து அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூசி தரப்பில் அதிகபட்சமாக ஜேமிசன் 38 ரன்கள் அடிக்க, இங்கி தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணியின் ஓபனர்கள் பென் டக்கட் 33 ரன்னிலும், எமிலோ கேய் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேல் 14 ரன், ரூட் 8 ரன், ஹாரி புரூக் 0, கேப்டன் ஸ்டோக்ஸ் 0 ரன்னுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 185 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜேசி ஸ்மித் 23 ரன், அட்கிசன் 7 ரன்னுடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

Related Stories: