சென்னை: சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடுபோன விவகாரத்தில் கைதான கோபிநாத் ஹார்டு டிஸ்க்குகளை விற்ற பெங்களூரு கடையில் இருந்து 35 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்தனர். மின்வாரியத்தில் கோபிநாத் 18 ஹார்டு டிஸ்க் திருடியநிலையில் எஞ்சிய 17 ஹார்டு டிஸ்க்கை எங்கே திருடினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
