×

செங்கோட்டையனுக்கு பின்னடைவு, கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம்; அமைச்சரவையின் பதவி மூப்பு பட்டியல்: தமிழ்நாடு அரசு வெளியீடு

 

சென்னை: தமிழக அமைச்சரவையின் மூப்பு (சீனியாரிட்டி) பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் விஜய் முதலிடத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக கருதப்படும் செங்கோட்டையன் 4வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், விசிகவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாமல் மைனாரிட்டியாக இருந்தது.

இதையடுத்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்துள்ளார். கடந்த மாதம் 10ம் தேதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். விஜய்யுடன் அன்றைய தினம் செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து அமைச்சரவை மீண்டும் விரிவாக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில், விஜய் கேபினட்டில் தற்போது 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் மூப்பு பட்டியலை (சீனியாரிட்டி) தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி முதல்வர் விஜய் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் அமைச்சர் புஸ்சி ஆனந்தும், மூன்றாம் இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் 4வது இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உள்ளனர். விஜய் கேபினட்டில் இடம் பெற்றுள்ளவர்களில் மிகவும் மூத்தவராக உள்ள செங்கோட்டையன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ளார். இந்த லிஸ்ட்டில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரசின் விஸ்வநாதன் 11வது இடத்தில் உள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சராக விஸ்வநாதன் உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் 12வது இடத்திலும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஷாஜகான் 13வது இடத்திலும், சமூக நீதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வன்னிஅரசு 14வது இடத்திலும் உள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்ட அமைச்சர்களின் மூப்பு பட்டியல் விவரம் வருமாறு:
1. விஜய், முதல்வர்
2. என். ஆனந்த், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை
3. ஆதவ் அர்ஜுனா, பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
4. கே.ஜி. அருண்ராஜ், சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை
5. கே.ஏ. செங்கோட்டையன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
6. பி.வெங்கடரமணன் – உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை

7. ஆர்.நிர்மல்குமார் – எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை
8. ராஜ்மோகன், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை
9. டி.கே.பிரபு, இயற்கை வளங்கள் துறை
10. எஸ்.கீர்த்தனா, தொழில்துறை
11. பி.விஸ்வநாதன், உயர்கல்வித் துறை
12. எஸ்.ராஜேஷ் குமார், சுற்றுலாத்துறை

13. ஏ.எம். ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை
14. வன்னிஅரசு, சமூக நீதித்துறை
15. ஏ.விஜய் தமிழன் பார்த்திபன், போக்குவரத்துத் துறை
16. பி.ராஜ்குமார், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
17. வி.சம்பத்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
18. எம்.விஜய் பாலாஜி, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை

19. கே.விக்னேஷ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை
20. கே.தென்னரசு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
21. ஜெ.முகமது பர்வாஸ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
22. வி.காந்திராஜ், கூட்டுறவு துறை அமைச்சர்
23. கே.ஜெகதீஸ்வரி, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை
24. வினோத், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை

25. சி.விஜயலட்சுமி பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை
26. டி.சரத்குமார், மனிதவள மேலாண்மை துறை
27. ரமேஷ், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை
28. பி.மதன் ராஜா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை
29. என்.மேரி வில்சன், நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை
30. ஸ்ரீநாத், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

31. எஸ்.கமலி, கால்நடை பராமரிப்பு துறை
32. ஆர்.குமார், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
33. ஆர்.வி.ரஞ்சித்குமார், வனத்துறை அமைச்சர்
34. டி.லோகேஷ் தமிழ்செல்வன், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை
35. ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை.

Tags : Sengottaiyan ,Tamil Nadu ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,Vijay ,Congress ,VK ,
× RELATED தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார்...