சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய செப்பேடுகள் விரைவில் இந்தியா திரும்ப உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர் வரலாற்று மற்றும் பண்பாட்டு சின்னங்கள் அனைத்தையும் கண்டறிந்து தாயகத்திற்கு மீட்டுக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மீட்கப்பட்டுள்ள செப்பேடுகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு, வருங்கால தலைமுறைகள் தமிழர் வரலாற்றை அறிந்து பெருமை கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். தமிழர் நாகரிகத்தின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் இந்த முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
