சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை தட்டச்சு செய்து எடுத்து வந்ததால் அதை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். தனது எம்எல்ஏ லெட்டர் பேடில் ராஜினாமா கடிதத்தை எழுதி கொண்டு வர சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி கையெழுத்திட்டு தந்தால் மட்டுமே ஏற்க முடியும். இசக்கி சுப்பையா ராஜினாமா கடிதத்தை அளிக்காமல் திரும்பினார்.
