எம்எல்ஏ பலம் குறைந்தும் ‘நிலைப்பாட்டில் உறுதி’ என வேலுமணி அணியின் கொறடா விஜயபாஸ்கர் தகவல்

 

சென்னை: எம்எல்ஏ பலம் குறைந்தும் ‘நிலைப்பாட்டில் உறுதி’ என வேலுமணி அணி கொறடா விஜயபாஸ்கர் கூறினார். சட்டமன்ற தேர்தலில் 47 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள அதிமுக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கே.பி.அன்பழகன் சந்தித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: ‘ஏற்கனவே தெரிவித்த நிலைப்பாட்டில்தான் நாங்கள் இருக்கிறோம்’ என பதிலளித்தார்.  எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்ததாக கூறப்பட்ட 25 எம்எல்ஏக்களில் 3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மேலும் 5 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எஸ்.பி.வேலுமணி அணியின் பலம் தற்போது 17 எம்எல்ஏக்களாக குறைந்துள்ளது.

இந்நிலையில் ‘நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில்தான் உறுதியாக இருக்கிறோம்’ என்று விஜயபாஸ்கர் கூறி வருவது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அணியின் எம்எல்ஏ பலம் தொடர்ந்து சரிந்து வருவதாக கூறப்படும் சூழலில், அவர்கள் எந்த அரசியல் கணக்கில் தங்களது நிலைப்பாட்டை தொடர்கிறார்கள் என்பது குறித்து கட்சியினரிடையே குழப்பமும் விவாதமும் நிலவி வருகிறது.

Related Stories: