கூடலூர், மே 25: தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த விருமாண்டி (34) என்பவரை பிடித்து சோதனையிட்டதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதேபோல, தெற்கு காவல் நிலைய எஸ்ஐ பாண்டிச்செல்வி தலைமையிலான போலீசார் கூடலூர் ஒட்டாங்குளம் கரையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்றிருந்த எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த கணேசன்(24) என்பவரை சோதனையிட்டபோது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
