சென்னை: அதிமுக எனும் ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள். அதிமுகவை சாய்க்க நினைப்பவர்கள் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் 5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான். தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தியுள்ளது’ எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
