பதவியே வழங்கப்படாத நிலையில் அமைச்சர் விஜய் சரவணன் என போஸ்டர் ஒட்டிய ஆதரவாளர்கள்: தஞ்சையில் பரபரப்பு

 

தஞ்சாவூர்: பதவி வழங்கப்படாத நிலையில் அமைச்சர் விஜய் சரவணன் என தஞ்சை மாநகர பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று இடதுசாரிகள், கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. ஜோசப் விஜய் முதவராக பதவி ஏற்றார். அவரோடு 9 எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவி ஏற்றனர்.

இதில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான தவெக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட தவெகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் தஞ்சாவூர் மாநகர் முழுவதும் முதலமைச்சர் தலைவர் விஜய்க்கும், மாண்புமிகு அமைச்சர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணனுக்கும் பணி சிறக்க வாழ்த்துகள் என அவரது போட்டோவுடன் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பிளக்ஸ் பேனரில் தவெக மருத்துவ கல்லூரி பகுதி கழகம், தஞ்சை தெற்கு மாநகரம், மத்திய மாவட்டம் என குறிப்பிடப்படப்பட்டு இருந்தது.

விஜய் சரவணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில் தஞ்சாவூர் மாநகர் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ‘மாண்புமிகு அமைச்சர்’ என பேனர்கள் வைத்திருப்பதும், போஸ்டர்கள் ஒட்டியிருப்பதும் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் சரவணன் எம்எல்ஏவாக வென்ற பிறகு அவர் போதையில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: