அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்: திண்டுக்கல் சீனிவாசன் புலம்பல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிமுக மாநில பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக எம்எல்ஏக்களில் 22 பேர் எடப்பாடிக்கும், 25 எம்எல்ஏக்கள் எதிர் தரப்புக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். மெஜாரிட்டி எங்கள் பக்கம் உள்ளது. நத்தம் விஸ்வநாதன் மீண்டும் எங்களுடன் சேர்ந்து செயல்படுவாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி எடப்பாடி பழனிசாமி சொல்வது தான் சரியானது. இந்த தேர்தலை பொறுத்தவரை, அதிமுகவை மக்கள் புறக்கணித்துள்ளனர். தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்எக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது எனக்கு தெரியாது. நான் ஜோதிடர் இல்லை. அவர்களை பதவி நீக்கம் செய்ய வழக்கு போட தயாராக இருக்கிறோம். சட்டப்படி நடக்கும். அதிமுகவில் இருந்து அணியாக பிரிந்தவர்களை சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி தான் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: