கோவை: சுந்தராபுரம் பகுதியில் கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சதாம் உசேன், பைசல், பாரூக் ஆகிய மூவரிடம் இருந்து ரூ.36,800 மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ள நோட்டுகளை அடிக்க அச்சு இயந்திரம் வாங்கி கொடுத்த காஜா மொய்தீனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
