சாக்லேட் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது: போக்சோ சட்டத்தில் போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (50). இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கி கொடுத்து பேசி வந்துள்ளார். இதன்படி சிறுமியும் ரமேஷூம் சிரித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரமேஷ், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அழைத்து அதிகளவில் சாக்லேட் வாங்கி தருவதாகவும், செலவுக்கு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி ரமேஷிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

அதன்படி சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் ரமேஷை பிடித்து விசாரணை நடத்திய போது, போதையில் தெரியாமல் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டாதாக ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் ரமேஷ் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

Related Stories: