புதுச்சேரியில் 5வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி..!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்து, ஆதரவு கடிதம் வழங்கினர். இதையடுத்து அவர் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு ரங்கசாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று முன்தினம் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். அப்போது புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார். இந்தநிலையில் 5-வது முறையாக புதுச்சேரி மாநில முதலமைச்சராக ரங்கசாமி இன்று காலை 9.45 மணிக்கு பதவியேற்றார்.

இதற்கான விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதுச்சேரி மாநிலத்தின் 16-வது சட்டமன்ற முதலமைச்சர் ரங்கசாமி கடவுள் மீது ஆணையிட்டு பதவி ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்ந்து பா.ஜனதாவை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

Related Stories: