எம்எல்ஏ-க்களை கடன் பெற்று ஆட்சியை நடத்தும் தவெக மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்

சென்னை: தவெக ஆட்சிக்கு வர பெரும்பான்மை மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமாகி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார். தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்கு பின் வாக்களித்த தொகுதி மக்களை நேரில் கூட சென்று பார்க்கவில்லை, அவர்களுக்கு விஜய் இன்னும் நன்றி கூட சொல்லவில்லை.

தோல்வி பயம் காரணமாகவே விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இருக்கிறார். திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது. சுமார் 3.21 கோடி தமிழக மக்களால் தவெக நிராகரிக்கப்பட்டுள்ளதையும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சி நடத்தாதீர்கள் என்று கூறினார்.
“அதிமுக பிளவு பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்து தான் ட்விஸ்ட். அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதலமைச்சரும் போறாரு. புஷ்பா பட பாணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

 

Related Stories: