சென்னை: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக விலகி நிற்கும் என பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும். விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். தவெக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கனிமவளக் கொள்ளையை தடுக்கவேண்டும். முழு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
