டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற வேகபந்து வீராங்கனைக்கு தென் ஆப்ரிக்கா அணியில் இடம்

கேப் டவுன்: டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் ஜூன் 12ம் தேதி தொடங்குகிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பேஸ்டனில் முதல் போட்டியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2023ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற 37 வயது வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயிலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர், டி20 போட்டிகளில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவர் கடைசியாக 2023 டி20 உலகக்கோப்பையை தொடரில் தென் ஆப்ரிக்கா அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போது, தென் ஆப்ரிக்கா இறுதி போட்டி வரை தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்கா அணி விவரம்: லாரா வோல்வார்ட் (c), டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சென், ஷப்னிம் இஸ்மாயில், சினாலோ, ஜாஃப்டா, மரிசான் கப், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், கராபோ மெசோ, நோன்குலுலேகோ ம்லாபா, கெய்லா ரெய்னேகே, துமி செகுகுனே, க்ளோ ட்ரையோன், டேன் வான் நியர்கெர்க்.

Related Stories: