ஆபாச சைகை ஆர்சிபி வீரருக்கு 30% அபராதம்: அக்சருக்கு ரூ.12 லட்சம் பைன்

டெல்லி: ஐபிஎல்லில் 55வது லீக் போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் நேற்று முன்தினம் நடந்தது. இதில் டெல்லி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் டெல்லி அணி கேப்டனுக்கு ரூ.12 அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், 54வது லீக் போட்டியில் ராஜஸ்தானை அணியை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆபாச சைகை காட்டி பெங்களுரூ அணி வீரர் டிம் டேவிட் கொண்டாடினார். இந்நிலையில், ஆபாச சைகை காட்டி கொண்டாடிய டிம் டேவிட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 2 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

Related Stories: