பிளே ஆப் பந்தயத்தில் மல்லுகட்டும் 7 அணிகள்: சிஎஸ்கே தலை தப்புமா?

மும்பை: தர்மசாலாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டேவிட் மில்லர் மற்றும் அக்சர் படேலின் அதிரடி பேட்டிங்கால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்தது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணியின் பிளேஆஃப் வாய்ப்பு புத்துயிர் பெற்றுள்ளது. இந்த போட்டியானது புள்ளிகள் அட்டவணையில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது. தோல்வியடைந்த போதிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 4வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

எனினும், டெல்லி கேப்பிடல்ஸ் 211 ரன்களை வெற்றிகரமாக துரத்தியதால், பஞ்சாப் அணியின் நிகர ரன் ரேட் 0.571லிருந்து 0.428 ஆகக் குறைந்தது. நேற்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி கொல்கத்தாவை தாண்டி 10 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு முன்னேறியது. அவர்களின் நிகர ரன் ரேட்டும் -1.154லிருந்து 0.993 ஆக மாறியது. ஆர்சிபி, சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முதல் 3 இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் 3 போட்டியிலுமே வென்றால், 18 புள்ளிகளை பெற்று சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேலை 2 போட்டியில் வென்றால், 16 புள்ளிகள் பெற்று, மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். ஐபிஎல் நடப்பு சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் எந்த அணி முதல் இடம் பிடிக்கும், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் என்பது அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளில் தெரிந்துவிடும் என்பதால் போட்டிகளை காண ரசிகர்கள் ஆரவாரமாக காத்திருக்கின்றனர்.

Related Stories: