முதல் டெஸ்டில் அபார வெற்றி: பாகிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்

டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடி வங்கதேச அணி 413 ரன்கலுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியில் ஷாண்டோ 101 ரன், மொமினுல் ஹஜ் 91 ரன், முஷ்பிகுர் ரஹீம் 71 ரன், லிட்டன் தாஸ் 33 ரன் எடுத்தனர். பாகிஸ்தானி சார்பில் முகமது அப்பாஸ் 5, ஷாஹின் அப்ரிடி 3 விக்கெடும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆசான் அவைஸ் 103 ரன் எடுத்தார். அப்துல்லா பசல் 60 ரன், மொகமது ரிஸ்வான் 59 ரன், சல்மான் ஆகா 58 ரன்னும் குவித்தனர். வங்கதேசம் தரப்பில் மெஹிதி 5 விக்கெட்டுகளும், தஸ்கின் அமகது, தஜ்ஜுல் இஸ்லாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 27 ரன்கள் முன்னிலை 2வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது. 9 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்திருந்த நிலையில் வங்கதேச அணி டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஷாண்டோ 87 ரன், மொமினுல் ஹக் 56 ரன் எடுத்தனர். 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அப்துல்லா பைசல் 66 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் நஹித் ரானா 5 விக்கெட்டும், தஜ்ஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: