புதுடெல்லி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அக்கட்சி ஆட்சி அமைக்க கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்த பின்பும் ஆளுநர் அக்கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை மாறாக பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் தவெகவைச் சேர்ந்த எழிலரசி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட்மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை ஆளுநர் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். இது தொடர்பாக உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
