புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2ம் தேதி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முத்தியால்பேட்டையை சேர்ந்த கருணா (எ) கருணாஸ் (18), விவேகானந்தன் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுமதி, கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்து தண்டனை விவரம் மே 5ல் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி அரசு வழக்கறிஞர் பச்சையப்பன், சிறுமி குடும்பத்தின் வழக்கறிஞர் ப்ரவீன் ஆஜராகி, 20 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை முன் வைத்து, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தினர்.
இதற்கு நீதிபதி சுமதி, மரண தண்டனை விதிக்க அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி நேற்று காலை அரசு தரப்பு சார்பில் சமூக நலத்துறை மூலம் நீதிபதி முன்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அப்ேபாது கருணாஸ், எஸ்சி-எஸ்டி பிரிவை சார்ந்தவர் என்பதால் கருணை காட்டி தண்டனையை குறைக்க எதிர் தரப்பினர் வாதம் வைத்தனர். இதையடுத்து நீதிபதி சுமதி, குற்றவாளிக்கான தண்டனை விவரம் நாளை (இன்று) அறிவிக்கப்படும் என கூறி ஒத்திவைத்தார்.
