234 தொகுதிகளிலும் 1,72,26,209 பேர் வாக்களித்த தவெகவுக்கு 34.92% வாக்குகள்: திமுகவுக்கு 24.19%, அதிமுகவுக்கு 21.21% வாக்குகள்

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் தவெகவுக்கு 1,72,26,209 பேர் வாக்களித்து, 34.92 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. திமுகவுக்கு 24.19 சதவீதம் (1,19,29,144 வாக்குகள்) பேரும், அதிமுகவுக்கு 21.21 சதவீதம் (1,04,62,146 வாக்குகள்) பேரும் வாக்களித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் 108 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்பதால், விஜய் ஆட்சி அமைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, உதிரி கட்சிகள் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இதனால் தொங்கு சட்டசபையே தமிழகத்தில் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக 59 இடங்களில் வெற்றிபெற்று தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. 47 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர, திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடம், விடுதலை சிறுத்தைகள் 2 இடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடம், மார்க்சிய கம்யூனிஸ்ட் 2 இடம், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடம், தேமுதிக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக 4 இடம், பாஜ 1 இடம், அமமுக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் தவெக 34.92 சதவீத வாக்குகளும், திமுக 24.19 சதவீதம் வாக்குகளும், அதிமுக 21.21 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன.

4 கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் சதவீதம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் தவெக 1,70,62,084 ஓட்டுகள் பெற்று 34.96 சதவீதமும், திமுக கூட்டணி கட்சி 1,54,07,967 ஓட்டுகள் பெற்று 31.57 சதவீதமும், அதிமுக கூட்டணி கட்சி 1,32,84,090 ஓட்டுகள் பெற்று 27.22 சதவீதமும், நாதக 19,49,367 ஓட்டுகள் பெற்று 3.99 சதவீதமும் பெற்றுள்ளது. மேலும் திமுக கூட்டணியை விட தவெக 16,54,117 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: