திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர், மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பிச்சை முகமது (89). இவர் திமுக நகர் பொருளாளராக 30 வருடங்களாக இருந்தார். மேலும் 3 முறை திமுக சார்பில் பேரூராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
அதே போல் திருப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர்.பெரியகருப்பன் ஒரு வாக்கில் தோல்வியடைந்தார். இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அதிர்ச்சி அடைந்த இவர் நேற்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இவருடைய மரணம் குடும்பத்தினரிடையேயும், கட்சியினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
