அந்தமானில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய தேசியக்கொடியை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை

ஸ்ரீவிஜயபுரம்: அந்தமான் மற்றும் நிகோபரில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய தேசியக்கொடியை பறக்கவைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிகோபர் நிர்வாகம் ராதாநகர் கடல்பகுதியில் சுமார் 60க்கு 40மீட்டர் அளவுள்ள பிரம்மாண்டமான தேசியக்கொடியை கடலுக்கு அடியில் பறக்கவைத்துள்ளது.

பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலமாக தேசியக்கொடி நீருக்கடியில் பறக்கவைக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் டிகே ஜோஷி, தலைமைச் செயலாளர் சந்திரபூஷன் குமார் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் தாலிவால் மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

அந்தமான் மற்றும் நிகேபார் காவல்துறை, வனத்துறை, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை ஆகியவற்றை சேர்ந்தவர்களும், பல்வேறு நீச்சல் மையங்களை சேர்ந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களும் இணைந்து இந்த தேசியக்கொடி விரிப்பு நிகழ்வை வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். கின்னஸ் உலக சாதனைகளின் நடுவரான ரிஷிநாத் இந்த சாதனையை முறையாக உறுதி செய்து அதற்கான சான்றிதழை துணை நிலை ஆளுநரிடம் வழங்கினார்.

Related Stories: