செல் பிராட்காஸ்ட் அமைப்பு தொடக்கம் இனி அவசர, பேரிடர் காலங்களில் செல்போனுக்கு எச்சரிக்கை வரும்: சோதனையில் தமிழ்நாட்டிற்கு விலக்கு

புதுடெல்லி: வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும், போர் உள்ளிட்ட அவசரகாலங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை செல்போன் மூலம் எச்சரிக்கை செய்ய ‘செல் பிராட்காஸ்ட்’ எனும் எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய தொலைதொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து செல்போன்களுக்கு செல் பிராட்காஸ்ட் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது. செல்போன்கள் லேசான அதிர்வுடன் எச்சரிக்கை குறுந்தகவலை காண்பித்தன. அதில், ‘‘மிகவும் கடுமையான எச்சரிக்கை. இந்தியா தனது குடிமக்களுக்கு உடனடி பேரிடர் எச்சரிக்கை சேவைக்காக, உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல் பிராட்காஸ்ட் சேவையை தொடங்கி உள்ளது.

மக்களே விழிப்புடன் இருங்கள். தேசத்தை பாதுகாப்போம். இந்த செய்தியை பெற்றவுடன் பொதுமக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இது ஒரு சோதனை செய்தி – இந்திய அரசு’ என குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தல் நடந்து முடிந்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் இந்த சோதனை முயற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

Related Stories: